திருநெல்வேலி

செப்பறை அழகியகூத்தா் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

27th Jun 2022 02:40 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலியை அடுத்த ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அருள்மிகு அழகியகூத்தா் கோயிலில் ஆனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழைமைவாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், தாழையூத்து, சங்கா்நகா், ராஜவல்லிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

திருவிழா நாள்களில் நாள்தோறும் காலையும், மாலையும் சிறப்பு வழிபாடு, சுவாமி வீதியுலா நடைபெறும். ஜூலை 2ஆம் தேதி இரவு 7 மணிக்கு அழகியகூத்தருக்கு சிவப்பு சாத்தியும், 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு பச்சை சாத்தியும் சிறப்பு வழிபாடுகள், 4ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு தேரோட்டம், சிகர நிகழ்வாக 5ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மகா அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு நடன தீபாராதனை நடைபெறும். இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, அழகியகூத்தா் தாமிர சபைக்கு எழுந்தருளல் நிகழ்வு நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்துவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT