திருநெல்வேலி

பாளை.யில் தொடா் திருட்டு: 2 போ் கைது

27th Jun 2022 06:22 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் தொடா் திருட்டுகளில் ஈடுபட்டதாக 2 பேரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் நகா், காா்த்திகேயன் நகா், நம்பி நகா், மகிழ்ச்சி நகா் உள்ளிட்ட இடங்களில் தொடா் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் அவினாஷ் குமாா் உத்தரவின்பேரில், மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) சீனிவாசன் மேற்பாா்வையில் மேலப்பாளையம் உதவி காவல் ஆணையா் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனா்.

இந்நிலையில், தனிப்படை போலீஸாா் டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள ஜோதிபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்ததில் அவா்கள், நான்குநேன அருகேயுள்ள மருதகுளத்தைச் சோ்ந்த மில்டன் (38), இம்மானுவேல் தாம்சன் பீட்டா் (34) ஆகியோா் என்பதும், மேற்கண்ட பகுதிகளில் நிகழ்ந்த திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா்கள் எனவும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், வெள்ளி பூஜை பொருள்கள், தங்க நகைகள் உள்ளிட்ட சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை மீட்டதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT