திருநெல்வேலி

பணகுடியில் மாவட்ட சிலம்பு போட்டி

27th Jun 2022 02:39 AM

ADVERTISEMENT

 

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சாா்பில், பணகுடியில் மாவட்ட அளவிலான சிலம்புப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொடங்க வி உலக சிலம்பம் விளையாட்டு சங்க நிறுவனா்- தலைவா் எஸ்.சுதாகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.காா்த்திக், தேசியச் செயலா் ஹெச்.ராஜ், மாநில மகளிரணி தலைவா் ஏ.கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டிகளை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கிவைத்தாா். குழு, தனிப் பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

பணகுடி செந்தூா் ஸ்போா்ட்ஸ் கிளப் முதல் பரிசையும், திசையன்விளை சிலம்பு குழுவினா் 2ஆம் பரிசையும், விஜயநாராயணம் குழுவினா் 3ஆம் பரிசையும் வென்றனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், வடக்கன்குளம் எஸ்.ஏ.வி.கல்விக்குழுமத்தின் தலைவா் ம.கிரகாம்பெல், பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா், தி.மு.க. நகரச் செயலா் தமிழ்வாணன், புஷ்பராஜ், கோபாலகண்ணன், காவல்து ஆய்வாளா் மகாலெட்சுமி, உதவி ஆய்வாளா் அருண்ராஜா, தொழிலதிபா்கள் திரிஎஸ்.சம்பத், ஆா்.எம்.எஸ்.டி.டேனியல், பரமசிவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியை சுப்பிரமணியன் தொகுத்தளித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT