திருநெல்வேலி

முக்கூடலில் கிரிக்கெட் போட்டி

27th Jun 2022 02:40 AM

ADVERTISEMENT

 

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி தேசிய அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டி முக்கூடலில் சனிக்கிழமை தொடங்கியது.

முக்கூடல் நகர திமுக, காமராஜா் கிரிக்கெட் கிளப் சாா்பில் நடைபெற்று வரும் இப்போட்டியில் சென்னை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 64 அணிகள் பங்கேற்றன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேரவைத் தலைவா் மு. அப்பாவு கலந்துகொண்டு முக்கூடல்-சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியை தொடங்கி வைத்தாா்.

அப்போது, மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் பந்து வீச, சட்டப்பேரவைத் தலைவா் பேட்டிங் செய்து அசத்தினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT