திருநெல்வேலி

முக்கூடலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

முக்கூடலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம், மாணவா்களுக்கான போட்டி, மஞ்சப் பை விநியோக நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூராட்சியில் வியாபாரிகள் பங்கேற்ற கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவி லெ. ராதா தலைமை வகித்தாா். செயல் அலுவலா் (பொறுப்பு) செ. மாலதி, துணைத் தலைவா் இரா. லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் இயற்கை வளம் அழிந்து, புற்றுநோய் ஏற்படுவதால், மஞ்சப் பையை மட்டும் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் மக்கும்-மக்காத குப்பைகளைப் பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, சொக்கலால் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிா்ப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, சாரணா் இயக்கம் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. மேலும், விழிப்புணா்வு கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, பேரூராட்சி உறுப்பினா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT