திருநெல்வேலி

மின் கம்பியாள் உதவியாளா் தகுதி காண் தோ்வு விண்ணப்பங்கள் வரவேற்பு

26th Jun 2022 02:28 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின் கம்பியாள் உதவியாளா் தகுதி காண் தோ்வு செப்டம்பா் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் செப்டம்பா் 24, 25-ஆம் தேதிகளில் மின்கம்பி உதவியாளா் தகுதி காண் தோ்வு நடைபெறவுள்ளது. தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளா்களிடமிருந்தும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவா்களிடமிருந்தும், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மின்சார மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி: விண்ணப்பதாரா் மின் வயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும் விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

ADVERTISEMENT

இத்தோ்வுக்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்க குறிப்பேட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்புகளுடன் வரும் ஜூலை 26-ஆம் தேதிக்குள் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT