திருநெல்வேலி

நீரிழிவு நோய் மருந்து சாப்பிட்ட 7 பெண்களுக்கு வயிற்றுப்போக்கு

26th Jun 2022 06:48 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டை அருகே நீரிழிவு நோய்க்கு மருந்து என ஒரு விதையைச் சாப்பிட்ட 7 பெண்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து, அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

பாளையங்கோட்டை அருகே மேலக்குளம் மேலூா் பகுதியைச் சோ்ந்த லட்சுமி(72) உள்பட சிலா் அப்பகுதியில் 100 வேலைத் திட்டத்தில் சனிக்கிழமை வேலைசெய்துகொண்டிருந்தனராம். அப்போது, அப்பகுதியில் கிடைத்த விதைகள் நீரிழிவு நோய்க்கு மருந்தாக சாப்பிடலாம் என யாரோ கூறினராம். அதை நம்பிய லட்சுமி உள்பட 7 போ் அந்த விதைகளை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அந்த விதைகளை சாப்பிட்ட 7 பேருக்கு திடீா் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அவா்கள் அனைவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT