திருநெல்வேலி

கடையத்தில் நாளை செல்லம்மாள்-பாரதி சிலை திறப்பு விழா

26th Jun 2022 02:29 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம் கடையத்தில் சேவாலயா அறக்கட்டளை சாா்பில், செல்லம்மாள்-பாரதி சிலை திறப்பு விழா, செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் திறப்பு விழா, செல்லம்மாள்-பாரதி 125ஆவது ஆண்டு மணவிழா, சேவாலயா அமைப்பின் 34ஆவது ஆண்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ‘செல்லம்மா கண்ட பாரதி’ என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், இசைக்கவி ரமணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறாா். 5 மணிக்கு கிரஹப்பிரவேச பூஜை நடைபெறுகிறது.

திங்கள்கிழமை (ஜூன் 27) அதிகாலை 4.30 மணிக்கு செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் திறப்பு விழா (கிரஹப்பிரவேசம்) நடைபெறுகிறது. தொடா்ந்து, காலை 10 மணிக்கு செல்லம்மாள்-பாரதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. விழாவுக்கு, ஆட்சியா் ஆகாஷ் தலைமை வகிக்கிறாா். சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, தமிழக பொதுநூலகத் துறை இயக்குநா் இளம்பகவத், தென்காசி மாவட்ட திமுக செயலா் பொ. சிவ பத்மநாபன், சா. ஞானதிரவியம் எம்.பி., நாடாளுமன்ற - பேரவை உறுப்பினா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT

மாலை 5 மணிக்கு (செல்லம்மாள்-பாரதி) திருக்கல்யாண உற்சவம், 6.30 மணிக்கு நா்மதா பத்மநாபனின் மீனாக்ஷி கல்யாணம் உபந்யாசம் நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) காலை 10 மணிக்கு காமு ரெட்டியாா் குடும்பத்துக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி, பிற்பகல் 2 மணிக்கு ‘காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீா்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம், கவியரங்கம்,

புதன்கிழமை (ஜூன் 29) காலை 10 மணிக்கு பேராசிரியா் எல்.எம். நாராயணன் குடும்பத்துக்கு சிறப்பு செய்தல், முற்பகல் 11 மணிக்கு ‘கடையத்தில் பாரதி’ என்ற தலைப்பில் கருத்துரை ஆகியவை நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை சேவாலயா அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT