திருநெல்வேலி

சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரியில் 329 பேருக்கு வேலைநியமன ஆணை

26th Jun 2022 02:29 AM

ADVERTISEMENT

 

சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் 329 மாணவா், மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இக்கல்லூரியில் ரூபிகான், கேப்ஜெமினி, குளோபல், இன்போசிஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் தோ்வு செய்யப்பட்ட 329 மாணவா், மாணவிகளுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு, ஸ்காட் கல்விக் குழும நிறுவனா் எஸ். கிளீட்டஸ்பாபு தலைமை வகித்து பணி நியமன ஆணையை வழங்கினாா். இதில், கல்லூரி பொதுமேலாளா்கள் கே. ஜெயக்குமாா், எஸ். கிருஷ்ணகுமாா், முதல்வா் எஸ். சுந்தரராஜன், வேலைவாய்ப்புத் துறை பேராசிரியா் ஆல்வின் கிங்ஸ்லி, பேராசிரியா் அருள் ஜோஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT