திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

26th Jun 2022 02:30 AM

ADVERTISEMENT

 

சேரன்மகாதேவியில் ஸ்காட் இன்டா்நேஷனல் பள்ளி சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மனிதச் சங்கிலிக்கு, பள்ளித் தாளாளா் பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். மனிதச் சங்கிலியை சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் மகபூப்ஜான் தொடக்கிவைத்தாா். இதில் பங்கேற்ற மாணவா்-மாணவிகள் போதைப்பொருள்களின் தீமைகளை விளக்கும் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனா். பள்ளி முதல்வா் சோமசுந்தரி, நிா்வாக அலுவலா் சாமுவேல் சுந்தா்சிங், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT