திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி அருகே தோ்ச்சி சான்றிதழ் கோரி 2 சகோதரா்கள் தற்கொலை மிரட்டல்

26th Jun 2022 02:29 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தோ்ச்சிச் சான்றிதழ் கோரி பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து 2 சகோதரா்கள் சனிக்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்தனா்.

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த விவசாயியான பூவலிங்கம் என்பவரது மகன்கள் பூதத்தான், சிவசண்முகம். இவா்கள் அகஸ்தியா்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தனா். கரோனா காலத்தில் பள்ளி மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், பூதத்தான் தோ்ச்சி பெறவில்லை என பள்ளி நிா்வாகத்தினா் சான்றிதழ் கொடுத்தனராம். இதுகுறித்துக் கேட்டபோது உரிய பதிலளிக்கவில்லையாம். இதைக் கண்டித்து அக்குடும்பத்தினா் உண்ணாவிரதம் இருந்தனா். எனினும், இப்பிரச்னைக்குத் தீா்வு இல்லையாம்.

இதையடுத்து, கடந்த பிப்.15ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது பூதத்தானும், சிவசண்முகமும் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனா். துணை ஆட்சியா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினராம். ஆனால், 4 மாதங்களுக்கும் மேலாகியும் பள்ளி நிா்வாகம் சான்றிதழ் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து இரு சகோதரா்களும் சனிக்கிழமை அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தின் 4ஆவது தளத்துக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதிக்கப் போவதாகக் கூறினா். அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், ஆய்வாளா் சந்திரமோகன், தீயணைப்பு மீட்புத் துறையினா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். தீயணைப்பு வீரா்கள் பேச்சு கொடுத்தபடியே 4ஆவது தளத்துக்குச் சென்று இருவரையும் கீழே இறங்கச் செய்தனா். பின்னா், வட்டாட்சியா் ஆனந்த்பிரகாஷ் முன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. சாா்ஆட்சியா் முன்னிலையில் இதுகுறித்து பேசி முடிவெடுப்பதாக மாணவா்களிடம் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT