திருநெல்வேலி

விவசாயிகளுக்கு பழ மரங்களில் ஒட்டுக்கட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி

25th Jun 2022 03:37 AM

ADVERTISEMENT

பழ மரங்களில் ஒட்டுக்கட்டுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி மானூா் வட்டார விவசாயிகளுக்கு அண்மையில் நடைபெற்றது.

வன்னிகோனேந்தல் அரசு தோட்டக்கலை பண்ணையில் நடைபெற்ற இப் பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்துகொண்டனா். தோட்டக்கலை உதவி இயக்குநா் இளங்கோ வரவேற்றாா். பழ மரங்களில் ஒட்டுக்கட்டுதலின் முக்கியத்துவங்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து திருநெல்வேலி தோட்டக்கலை துணை இயக்குநா் என்.பாலகிருஷ்ணன் பேசினாா். ஒட்டுக்கட்டுதல் செயல்முறை விளக்கத்தை தோட்டக்கலை அலுவலா் பாலன் செய்துகாட்டினாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் பா.ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் அ.காா்த்திகேயன், கோ.ராஜாமணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT