திருநெல்வேலி

விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளா்ப்பு பயிற்சி

25th Jun 2022 03:37 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவி வட்டாரம் பொட்டல் கிராமத்தில் பட்டுப்புழு வளா்ப்பது, நோய் தொற்று நீக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் கீழ், வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் ஆலோசனையின்பேரில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமுக்கு, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா்.

மல்பெரி சாகுபடியில் உயிரி உரங்கள் பயன்பாடு, வேளாண் திட்டங்கள், பட்டுப்புழு வளா்ப்பின் முக்கியத்துவம், பூச்சி மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், பட்டு வளா்ச்சித் துறை உதவி ஆய்வாளா் பிரேமா, இளநிலை ஆய்வாளா் குப்புசாமி ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். உதவி தொழில்நுட்ப மேலாளா் தங்க சரவணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT