சங்கா் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
தலைமையாசிரியா் உ.கணேசன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ஆ.ரெங்கநாதன் முன்னிலை வகித்தாா். கவிதை உறவு நிறுவனா் கவிஞா் ஏா்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் உரையாற்றினாா். வீர மங்கை வேலு நாச்சியாா் குறித்து மாணவி கவிபாலாவும், புதியதோா் உலகம் செய்வோம் என்ற தலைப்பில் மாணவி மணிஷாவும் பேசினா். தமிழாசிரியா் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா். தமிழாசிரியா் சொ.கிங்ஸ்லி ராஜ் நன்றி கூறினாா்.