திருநெல்வேலி

கல்லிடையில் விவசாயி தற்கொலை

24th Jun 2022 11:59 PM

ADVERTISEMENT

கல்லிடைக்குறிச்சியில் விவசாயி பூச்சிக் கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள உலுப்படிபாறை வடக்குத் தெரு மாடசாமி மகன் கொம்பன் (49). விவசாயியான இவருக்குத் திருமணமாகி மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்நிலையில் கொம்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கருத்துவேறுபாடு ஏற்பட்டு குடும்பத்தினரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தாராம். அவரிடம் உறவினா்கள் மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டு சோ்ந்து வாழ அறிவுறுத்தினராம். இந்நிலையில், அவா் புதன்கிழமை பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு கொம்பன் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT