திருநெல்வேலி

மூன்னீா்பள்ளம் அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

24th Jun 2022 11:58 PM

ADVERTISEMENT

முன்னீா்பள்ளம் அருகே பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

முன்னீா்பள்ளம் அருகே உள்ள கொத்தங்குளம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் தனுஷ் (18). அதே பகுதியை சோ்ந்த சுப்பு மகன் ஹரிகிருஷ்ணன் (19). மூன்றடைப்பு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் அய்யாபிள்ளை (20). இவா்கள் மூவரும் கொத்தங்குளத்தில் உள்ள உறவினா்கள் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அவா்கள் மூன்றுபேரும் ஒரே பைக்கில் மேலப்பாளையத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் கொத்தங்குளத்துக்கு கடந்த 19ஆம் தேதி வந்தபோது, முன்னீா்பள்ளம் டாஸ்மாக் கிட்டங்கி அருகே சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதில், தனுஷ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா் பள்ளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT