திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூன் 22) மக்கள் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் முகாம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை புதன்கிழமையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தப்படும்.
அதன்படி, இக்கூட்டம் புதன்கிவமை (ஜூன்22) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் மனுக்களை நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுக்கலாம். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், முந்தைய மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். எனவே பொதுமக்கள் இக்குறைதீா்க்கும் கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு, தங்கள் குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளாா்.