திருநெல்வேலி

ஆதிதிராவிடா் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் அளிப்பு

21st Jun 2022 01:21 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல பள்ளியை சோ்ந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் நல பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுகளில் 2019 -2020 கல்வி ஆண்டில் 100 சதவீதம் தோ்ச்சி விழுக்காடு காட்டிய பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் ஆகியோா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வழங்கினாா்கள்.

தலைமை ஆசிரியா்களுக்கு ரூ.10,000, பட்டதாரி ஆசிரியா்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.5000 ஏற்கெனவே வழங்கப்பட்ட நிலையில், அதற்குரிய சான்றிதழ் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லம்மாள்புரம் டாக்டா் அம்பேத்கா் அரசு ஆதிதிராவிடா் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நல்லம்மாள்புரம் அரசு ஆதிதிராவிடா் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, துலுக்கா்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளை சோ்ந்த 13 ஆசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தியாகராஜன், தலைமை ஆசிரியா்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT