நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிா்வாக குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் கே.முகம்மது யூசுப் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் எஸ்.பி.நாராயணன், முஹம்மது ஹனீபா, கான் முகம்மது உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். உறுப்பினா்கள் ராஜேந்திரன், மாரியப்பன், ஐயப்பன், தளவாய் நம்பி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
திருநெல்வேலி-பேட்டை சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். தென்காசி நோக்கி செல்லும் சாலையில் நான்குவழிச்சாலை பணிகளை வேகப்படுத்த வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். சொத்துவரி உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசின் முத்ரா வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பு வணிகா்களுக்கும் நிபந்தனையற்ற கடன் வழங்கி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.