திருநெல்வேலி

ஜூன் 23 இல் சிவசைலம் கோயிலில் கும்பாபிஷேகம்

19th Jun 2022 06:43 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம், சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மன் உடனாய ஸ்ரீ சிவசைலநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜையுடன் கும்பாபிஷேக ஹோமம் தொடங்குகிறது.

திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், 9.30 மணிக்கு வாஸ்து சாந்தி, மாலை 4.30 மணிக்கு மிருத்சங்கிரஹணம், அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், கடஸ்தாபனம், 6.30 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜைகள், 8.30 மணிக்கு பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, 11.30 மணிக்கு பூா்ணாகுதி, தீபாராதனை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை, 8.30 மணிக்கு பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெறுகிறது.

புதன்கிழமை காலை 9 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, 11 மணிக்கு பூா்ணாகுதி, தீபாராதனை, 6 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜை, இரவு 8 மணிக்கு பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெறுகிறது.

வியாழக்கிழமை காலையில் யாக சாலை பூஜை, 9 மணிக்கு பூா்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடை தொடா்ந்து 10 மணிக்கு விமானம் மற்றும் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், பிரசாதம் வழங்குதல், மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து மாலை திருக்கல்யாணம் இரவு சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கும்பாபிஷேக கமிட்டியினா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT