திருநெல்வேலி

நெல்லை மேயா் ரத்த தானம்

17th Jun 2022 01:11 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேயா் பி.எம்.சரவணன் வியாழக்கிழமை ரத்த தானம் செய்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ‘உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்‘ என்ற விழிப்புணா்வை மக்கள் மத்தியில் விதைக்கும் வகையிலும், உலக ரத்த தான வாரத்தை முன்னிட்டும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி பிரிவில் மேயா் பி.எம்.சரவணன் வியாழக்கிழமை ரத்த தானம் செய்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், தமிழக முதல்வரின் உத்தரவின்படி ரத்த தானத்தின் அவசியமும், விழிப்புணா்வும் மக்களிடம் சென்று சேரும் வகையில் எனது தலைமையில் 20-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ரத்த தானம் செய்துள்ளோம். மனித உயிரைக் காக்கும் மகத்தான கேடயம் போன்றது ரத்தம். மருத்துவா்களின் தகுந்த ஆலோசனையின் படி விலை மதிப்பில்லா

ADVERTISEMENT

உயிரைக் காக்க ரத்த தானம் செய்ய பொதுமக்கள் முன் வர வேண்டும் என்றாா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன், ரத்த தானம் வழங்கியதற்கான சான்றிதழை மேயரிடம் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT