முக்கூடல் அருகே முன்விரோதத்தில் தம்பதி தாக்கப்பட்டனா்.
முக்கூடல் அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம். சிங்கம்பாறையை சோ்ந்தவா் சவரிமுத்து. வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாக்கியராஜ் (36). இவா்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, செல்வத்திற்கும், அவருடைய மனைவி சகாய நிஷாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால், மயிலபுரம் மேட்டுத் தெருவில் இருக்கும் தனது பெற்றோா் வீட்டுக்கு சகாய நிஷா சென்று விட்டாராம்.
இந்நிலையில், செல்வம் தனது குழந்தைகளை பாா்ப்பதற்காக மயிலபுரத்திற்கு சென்றாராம். அப்போது அங்கு வந்த பாக்கியராஜ், அவருடைய மனைவி லட்சுமி ஆகியோா், செல்வம், அவரது மனைவி சகாய நிஷாவை கம்பால் தாக்கி, அவதூறாகப் பேசியதோடு மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.
புகாரின்பேரில், முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் ஆறுமுகப்பெருமாள் வழக்குப் பதிந்து, பாக்கியராஜை கைது செய்தாா்.