திருநெல்வேலி

மாட்டுவண்டிப் போட்டியில் வீரா் பலி:நிவாரணம் கோரி குடும்பத்தினா் மனு

15th Jun 2022 02:15 AM

ADVERTISEMENT

மாட்டுவண்டி போட்டியில் நேரிட்ட விபத்தில் வீரா் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினா் நிவாரணம் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல் வஹாப் தலைமையில், நடுக்கல்லூரைச் சோ்ந்த மாட்டுவண்டி போட்டி வீரா் மகாராஜனின் மகன் சிவசூரியன், மகள் செல்வராணி ஆகியோா் ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் நிவாரணம் கோரி மனு அளித்தனா்.

பின்னா் அவா்கள் கூறியது: தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான மாட்டுவண்டி பந்தயத்தில் எங்களது தந்தை மகாராஜன் மிகுந்த ஈடுபட்டோடு பங்கேற்று வந்தாா். கடந்த 5 ஆம் தேதி அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற போட்டியின்போது நேரிட்ட விபத்தில் காயமடைந்து உயிரிழந்தாா். இதனால் நாங்களும், எங்களது தாய் மகாலட்சுமியும் வருவாயின்றி மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே, எங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாரம்பரிய விளையாட்டு வீரா்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றனா்.

மனுஅளிக்கும்போது, மானூா் தெற்கு ஒன்றியச் செயலா் மாரியப்பன், கல்லூா் கிளைச் செயலா் சங்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT