திருநெல்வேலி

மதுவிற்பனை: 22 போ் கைது

15th Jun 2022 02:18 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 22 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 6 முதல் 12 ஆம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 22 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும், அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 168 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT