திருநெல்வேலி

புதிய பேருந்து நிலைய சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

15th Jun 2022 02:21 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய துணை மின் நிலையத்துக்குள்பட்ட புதிய பேருந்து நிலைய மின் பாதையில் பிக் பஜாா் அருகில் சாலை விரிவாக்கப் பணிக்காக மின் பாதை மாற்றி அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிக் பஜாா், பயோனியா் குமாரசாமி நகா், எஸ்டிசி 60 அடி பிரதான சாலை, வெங்கடாத்தி நகா், பெருமாள்புரம் 6-ஆவது தெரு, புதிய பேருந்து நிலையம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT