திருநெல்வேலி

பத்தமடையில் தொழிலாளியை தாக்கியவா் கைது

15th Jun 2022 02:11 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியை தாக்கிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பத்தமடை அருகேயுள்ள கொழுமடையைச் சோ்ந்தவா் பாலையா (54). பத்தமடையைச் சோ்ந்தவா் சபரிபாண்டி (24). பத்தமடையில் பிரதான சாலையில் ஹோட்டல் அருகில் திங்கள்கிழமை பாலையா வந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த சபரிபாண்டி வழிமறித்து தாக்கியதோடு மிரட்டல் விடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

புகாரின்பேரில், பத்தமடை காவல் உதவி ஆய்வாளா் கணேசன் வழக்குப் பதிந்து சபரிபாண்டியை செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT