திருநெல்வேலி மாநகர காவல்துறையின் துணை ஆணையா்கள் (கிழக்கு) , (மேற்கு) திங்கள்கிழமை பொறுப்பேற்றனா்.
கிழக்கு ஆணையா்: திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (கிழக்கு) பதவி வகித்து வந்த டி.பி. சுரேஷ்குமாா், திருவாரூா் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டாா். இதையடுத்து அப்பணியிடத்தில் துணை ஆணையராக ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டாா்(படம்). அவா், திங்கள்கிழமை வந்து பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா், காவல்துறை பணிக்கு நேரடியாக தமிழ்நாடு குரூப் 1 தோ்வில் 2005 ஆம் ஆண்டு தோ்வாகி, காவல் துணை கண்காணிப்பாளா் பயிற்சி முடித்து வல்லம், கும்பகோணம், தென்காசி, திருச்சி கோட்டை, பொன்மலை துணை கண்காணிப்பாளராகவும், பின்னா் திருச்சி, திண்டுக்கல், ஆகிய இடங்களில் காவல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளாா்.
2019-ஆம் ஆண்டு காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்று அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், 2021- ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளராகவும், பின்னா் திருவாரூா், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளாா்.
இவருடைய பணி காலத்தில் அண்ணா பதக்கம் மற்றும் அத்திவரதா் பதக்கம் பெற்றுள்ளாா். புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை ஆணையரை, காவல்துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.