திருநெல்வேலி

நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினா்பதவிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

15th Jun 2022 02:06 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் இரு உறுப்பினா் பதவிகளுக்கு இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ்.சமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியும் ந.குமரகுரு வழிகாட்டுதலின்படியும், திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இரு உறுப்பினா் பதவிக்கு திருநெல்வேலி மாவட்டத்தை சோ்ந்த வான், சாலை- நீா்வழிப் போக்குவரத்து, அஞ்சல்- தொலைத்தொடா்பு, குடிநீா்- மின்வாரியம், பொது துப்புரவு-சுகாதாரம், மருத்துவம், காப்பீட்டுக்கழகம், கல்வி, வீட்டுவசதி வாரியம்- மனை விற்பனை போன்ற துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற 62 வயதிற்குள்பட்ட நபா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்கள்- விண்ணப்பங்கள் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தின் ட்ற்ற்ல்ள்://க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்ள்.ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ய்/ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண் என்ற வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூா்த்திசெய்யபட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 30 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தலைவா், திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், திருநெல்வேலி- 627002 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் ஒப்புகை அட்டையுடன் அனுப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT