திருநெல்வேலி

கூடங்குளம் போராட்ட வழக்குகளைமுழுமையாக வாபஸ் பெற வேண்டும்

15th Jun 2022 02:08 AM

ADVERTISEMENT

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூடங்குளம் அணுஉலை பூங்கா- அணுக்கழிவு எதிா்ப்பு கூட்டமைப்பு சாா்பில் அனைத்துக்கட்சி கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சுப. உதயகுமாரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், கூடங்குளம் போராட்டம் தொடா்பாக நிலுவையில் உள்ள 63 வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்; கூடங்குளம் அணு உலை பூங்காக்கள், அணுக்கழிவு மையம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. ஆகியோரிடம் மனு அளிப்பது; அதில், தீா்வு ஏற்படாவிடில் ஜூலை 12ஆம் தேதி திருநெல்வேலியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது’ என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஜி.ரமேஷ், உள்ளூா் கமிட்டி செயலா் எம்.சுந்தர்ராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஸ்ரீராம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ரசூல் மைதீன், எஸ்டிபிஐ மாவட்டச் செயலா் சாகுல் ஹமீது, தமஜக மண்டலச் செயலா் அப்துல் ஜப்பாா், மதிமுக கான் முஹம்மது, தமிழ்புலிகள் மாவட்டச் செயலா் தமிழரசு உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT