திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பைக்கில் சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச்சென்றது தொடா்பான வழக்கில், 4 மாதங்களுக்குப் பின் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
நான்குனேரி அருகேயுள்ள மேலகாரங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சகாயலதா(49). மீனவன்குளம் தொடக்கப் பள்ளி ஆசிரியையான இவா், கடந்த பிப்.16ஆம் தேதி பள்ளி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்புகையில், மறுகால்குறிச்சி சந்திப்பு அருகே இரு இளைஞா்கள் அவரைவழிமறித்து மிரட்டி, வாகனத்தில் வைத்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு காவல் ஆய்வாளா் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிந்து விசாரித்தாா். அதில், மேலப்பாளையம், கணேசபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ரத்தினகுமாா் என்ற கொக்கிகுமாா்(30) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து 7 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டனா்; மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.