உவரி அருகே மண்ணெண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி சாலையில் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
த்தங்குழி, இடிந்தகரை மீனவா்களுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்காக, மீன்வளத் துறைக்கு சொந்தமான டேங்கா் லாரி மண்ணெணெயை ஏற்றிச்சென்றது. அந்த லாரி உவரியை அடுத்த காரிக்கோவில் பகுதியை நெருங்கியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், மண்ணெணெய் சாலையில் கொட்டியதுடன், லாரி ஓட்டுநரும், கிளீனரும் லேசான காயத்துடன் தப்பினா்.
இத்தகவல் அறிந்த உவரி போலீஸாா், திசையன்விளை தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால்,கன்னியாகுமரி- திருச்செந்தூா் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.