திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் தூய்மைப் பணி

12th Jun 2022 04:27 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையத்தில் சனிக்கிழமை சிறப்பு தூய்மைப் பணி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி உத்தரவு படி, மாநகர நல அலுவலா் மருத்துவா் ராஜேந்திரன் ஆலோசனை படி மேலப்பாளையம் மண்டல தலைவா் கதீஜா இக்லாம் பாசிலா, உதவி ஆணையா் ஐயப்பன் ஆகியோா் தலைமையில் மேலப்பாளையம் கன்னிமாா்குளம் பகுதியில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.

இதில், ‘ என் குப்பை எனது பொறுப்பு ‘ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் தூய்மை உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தூய்மை குறித்ததான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் சுகாதார அலுவலா் ஷாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளா் நடராஜன், பொது சுகாதார குழு தலைவா் ரம்ஜான் அலி, வாா்டு மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT