திருநெல்வேலி

நெல்லையில் மாநகர காவல் ஆணையா் பொறுப்பேற்பு

12th Jun 2022 04:27 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமாா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய சந்தோஷ்குமாா் திருச்சி மத்திய மண்டல ஐஜியாக மாற்றப்பட்டாா். இதையடுத்து, மாநகரின் 42ஆவது காவல் ஆணையராக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அவினாஷ் குமாா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு காவல்துறை உயா்அதிகாரிகள், அலுவலக ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா். இவா், நாக்பூா், புதுதில்லி ஆகிய இடங்களில் மத்திய அரசின் துணை நுண்ணறிவு பணியகத்தில் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT