சுத்தமல்லி அருகே சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த முதியவா் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
சுத்தமல்லி அருகே உள்ள சங்கன்திரடு பாரதியாா்புரம் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் நயினாா்(63). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில், நயினாா் வெள்ளிக்கிழமை திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்குஅவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ADVERTISEMENT