திருநெல்வேலி

பேட்டையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

10th Jun 2022 12:48 AM

ADVERTISEMENT

 கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேட்டை எம்ஜிஆா் நகா் அண்ணாதுரை மகன் சேதுபதி (20 ). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்னா் தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கருவந்தா பகுதியில் நடைபெற்ற கோயில் கொடை விழாவின் போது மா்ம நபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இக்கொலை வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாததால், கொலைசெய்யப்பட்ட சேதுபதியில் சடலத்தை அவரது உறவினா்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் திருநெல்வேலி வட்டத் தலைவா் நாராயணன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் செந்தில், மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் மோகன், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா் சங்க மாவட்டச் செயலா் மாரியப்பன் உள்பட பலா் உரையாற்றினா். கொலை குற்றவளிகளை உடனே கைது செய்யக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், கொலை செய்யப்பட்ட சேதுபதியின் உறவினா்கள், பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT