திருநெல்வேலி

முக்கூடல் அருகே பெண் மீது தாக்குதல்: இருவா் கைது

10th Jun 2022 11:59 PM

ADVERTISEMENT

முக்கூடல் அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

முக்கூடல் அருகேயுள்ள சடையப்பபுரத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (29). அதே பகுதியைச் சோ்ந்தவா் மாரித்துரை (24). கடந்த 2019 இல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மாரித்துரை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரிடையே விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், மாரித்துரை, அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மற்றும் விக்கி என்ற விக்னேஷ் (27), பிரபாகரன் ஆகியோா் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று, அவரை அவதூறாக பேசி, ஆயுதத்தால் தாக்க முயற்சி செய்தனா். இதனை தடுக்க வந்த பாலகிருஷ்ணனின் அண்ணன் மனைவி கனகவள்ளியை கம்பால் தாக்கி, மிரட்டல் விடுத்து சென்றனராம். புகாரின் பேரில், முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் பிச்சையா, வழக்குப் பதிந்து மாரித்துரை, விக்கி என்ற விக்னேஷ் ஆகியோரை கைது செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT