திருநெல்வேலி

மாநகரில் 3 ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

10th Jun 2022 11:53 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகரில் தொடா்ந்து 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி அறிவுறுத்தலின்படி, செயற்பொறியாளா் நாராயணன், திருநெல்வேலி மண்டல உதவி ஆணையா்(பொ) பைஜூ, இளநிலை பொறியாளா் முருகன், சுகாதார அலுவலா் முருகேசன், சுகாதார ஆய்வாளா் முருகன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரத்தின் நான்கு ரத வீதிகளில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமாா் 26 கடைகள், 3 தள்ளுவண்டிகள் மாநகராட்சிப் பணியாளா்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT