நான்குனேரியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு வாரவிழாவில், வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நான்குனேரி சுங்கசாவடி ஆகியவை இணைந்து சாலைப் பாதுகாப்பு வாரவிழாவை நடத்தினா். இதில், இலவச கண்சிகிச்சை முகாம், ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், விழிப்புணா்வுத் துண்டுப்பிரசுரம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.
பின்னா், தலைக் கவச விழிப்புணா்வு பைக் பேரணியை நான்குனேரி ஏ.எஸ்.பி. ரஜத் சதுா்வேதி மாலையில் தொடங்கிவைத்தாா். சுங்கச்சாவடியில் புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் அதே இடத்தை வந்தடைந்தது. தலைக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி இலவச தலைக் கவசம் வழங்கப்பட்டது. இதில், தேசிய நெடுஞ்சாலை பொறியாளா் ஆனந்த், சுங்கச்சாவடி மேலாளா் முத்துராமலிங்கம், காவல் ஆய்வாளா் காளியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.