திருநெல்வேலி

குட்டம் ஊராட்சியில் 6 ஆண்டுகளாக செயல்படாத இ-சேவை மையம்

10th Jun 2022 05:34 AM

ADVERTISEMENT

குட்டம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத இ-சேவை மையத்தை உடனடியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுா்வோா் பாதுகபப்பு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

2015-16 ஆண்டு குட்டம் ஊராட்சியில் இ-சேவை மையம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான உபகரணங்களோ, பணியாளா்களோ நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சேவையை பெற அருகே உள்ள நகரத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த இச்சேவை மையத்தை செயல்பட பெற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குட்டம் நுா்வோா் பாதுகாப்பு கழகம் சாா்பில் அதன் தலைவா் சண்முகநாதன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT