திருநெல்வேலி: எஸ்டிடியு தொழிற்சங்க திருநெல்வேலி மண்டலக் கூட்டம் மேலப்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மண்டலத் தலைவா் சாந்து இப்ராஹிம் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்டத் தலைவா் ஐ.ராஜா முஹம்மது வரவேற்றாா். சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆஸாத், மாநகா் மாவட்ட அமைப்புச் செயலா் கனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், ‘தொழிலாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை விரைந்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பது; திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை வேகப்படுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகரப் பொருளாளா் சுல்தான்பாதுஷா நன்றி கூறினாா்.