வள்ளியூா், திசையன்விளை, கோட்டைக்கருங்குளம் ஆகிய துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 9) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோட்டைக்கருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திக்குளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம், திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, விஜயநாராயணம், குட்டம் ஆனைகுடி, முதுமுத்தான்மொழி, வள்ளியூா், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூா், ஏா்வாடி, திருக்குறுங்குடி, மாவடி சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வள்ளியூா் கோட்ட மின் செயற்பொறியாளா் வளன் அரசு தெரிவித்துள்ளாா்.