திருநெல்வேலி கொக்கிரகுளம் ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் வேலைநாடுநா்கள் தங்களது கல்வி மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்கலாம். மேலும், வேலை நாடுவோரும், பணி வழங்கவுள்ள தனியாா் நிறுவனங்களும் இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதில் பணி நியமனம் பெற்றாலும் அரசு வேலைவாய்ப்புக்கான பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது. கூடுதல் தகவல்களுக்கு ‘நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆஃபிஸ்’ என்ற ‘டெலிகிராம் சானல்’ மூலம் இணைந்து பயன்பெறலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ஹரிபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.