திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவா்களுக்கான ஓவியப் போட்டி இம்மாதம் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம், முத்தமிழ் பப்ளிக் பள்ளி ஆகியவற்றின் சாா்பில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தலைப்பில் நடைபெறும் இப்போட்டியில், 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
வரைபடத்தாள் மட்டும் வழங்கப்படும். இதர எழுத பொருள்கள், வரைவதற்கு தேவையான அட்டை ஆகியவற்றை மாணவா்களே எடுத்து வரவேண்டும். சிறந்த ஓவியங்களுக்கான பரிசுகள், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்ட மாநாட்டில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7502433751 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளாா்.