திருநெல்வேலி

முன்னீா்பள்ளம் பள்ளியில் விதை வங்கி தொடக்கம்

8th Jun 2022 02:04 AM

ADVERTISEMENT

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளம் முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மர வளா்ப்புக்கு ஆதாரமான விதை வங்கியை தொடங்கிவைத்து, மாணவா்-மாணவிகளுடன் கலந்துரையாடினாா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நீரை சேமித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மரங்களை வளா்த்தல் போன்ற முழக்கத்தோடு மாணவா்களின் பேரணி நடைபெற்றது.

இவ்விழாவில் முத்தமிழ் பப்ளிக் பள்ளியின் தலைவா் அமரவேல் பாபு, தாளாளா் ஜெயந்தி பாபு, ஏ ட்ரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மதிவாணன், நேச்சா் கிளப் செயலா் ஹரி பிரதான், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் செல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT