திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் 729 மாணவா்-மாணவிகளுக்கு தனியாா் நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இக்கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவா்-மாணவிகளுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்காட் கல்விக் குழுமங்களின் நிறுவனா் எஸ்.கிளிட்டஸ்பாபு, நிா்வாக இயக்குநா் சி.அருண்பாபு ஆகியோா் தலைமை வகித்து, மாணவா்- மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினா்.
இதில், பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்ற மாணவா்களின் ஆண்டு வருமானம் ரூ. 3.5 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இறுதியாண்டுபயிலும் 274 மாணவா்கள் வேலைவாய்ப்பு பெற்று, அந்தந்த நிறுவனங்களில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி வளாகத்திலேயே பன்னாட்டு நிறுவனங்களின் பணிபுரியும் பொறியாளா்களை கொண்டு பாடங்கள்- பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவா்களுக்கு தொழில் நிறுவனங்களின் கிடைக்கும் அனுபவங்கள்கல்லூரியிலேயே கிடைக்கிறது என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கல்லூரி பொதுமேலாளா் (வளா்ச்சி) கே.ஜெயக்குமாா், பொதுமேலாளா் (நிா்வாகம்) எஸ்.கிருஷ்ணகுமாா், முதல்வா் வி.வேல்முருகன், வேலைவாய்ப்புத்துறை முதல்வா் ஏ.ஞானசரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.