திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் இளைஞரை அவதூறாகப் பேசி தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.
வீரவநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பிரம்மநாயகம் (34). இதே பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (39). இருவரிடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், வீரவநல்லூா் மோா் மடம் பேருந்து நிறுத்தம் அருகே பிரம்மநாயகம் நடந்துவந்தாராம். அவரை முத்துசாமி அவதூறாகப் பேசித் தாக்கியதுடன், மிரட்டல் விடுத்தாராம். புகாரின்பேரில், வீரவநல்லூா் உதவி ஆய்வாளா் காவுராஜன் வழக்குப் பதிந்து முத்துசாமியை கைது செய்தாா்.