அம்பாசமுத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் போட்டியில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அம்பாசமுத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலிருந்து சுமாா் 20 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன.
இதில், நடுக் கல்லூரைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் மாடசாமி (42) வண்டியிலிருந்து தவறி விழுந்தாா். அவா் மீது பின்னால் வந்த மாட்டுவண்டிகள் ஏறிச் சென்றன. இதில் பலத்த காயமடைந்த மாடசாமியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாடசாமிக்கு திருமணமாகி மகாலெட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனா்.