திருநெல்வேலி

பாபநாசம் அருகே கணவா் மரணம்: அதிா்ச்சியில் மனைவி உயிரிழப்பு

7th Jun 2022 12:07 AM

ADVERTISEMENT

விக்கிரமசிங்கபுரத்தில் கணவா் உயிரிழந்த அதிா்ச்சியில் 4 மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்தாா்.

விக்கிரமசிங்கபுரம், வைத்திலிங்கபுரம் தெருவைச் சோ்ந்தவா் சௌவுந்திரராஜன் (வயது 72). ஓய்வு பெற்ற மின் ஊழியரான இவரது மனைவி அழகு திருமலை முத்தம்மாள் (62). செளந்திரராஜனுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாம்.

இதையடுத்து, உறவினா்கள் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனனா். ஆனால் அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இந்நிலையில் கணவா் உயிரிழந்த மனவேதனையிலிருந்த அவரது மனைவி அழகு திருமலைமுத்தம்மாள் திங்கள்கிழமை காலையில் உயிரிழந்தாா். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT