வனத்துறை சாா்பில் பாபநாசம் வனச் சோதனைச் சாவடியில் மீண்டும் மஞ்சள் பை திட்டம் தொடங்கப்பட்டது.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெகிழி இல்லாத சரணாலயமாக மாற்றும் வகையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் பாபநாசம் வனச்சரகம் சோதனைச் சாவடியில் நடைபெற்ற மீண்டும் மஞ்சள் பை நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி வனப் பாதுகாவலா் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கள இயக்குநா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குனா் செண்பகப்ரியா முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், அகஸ்தியா் அருவி, காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் செல்லும் பயணிகளிடம் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு மஞ்சள் பை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பாபநாசம் வனச்சரக அலுவலா் ஸ்டாலின், முண்டந்துறை வனச்சரக அலுவலா் கருப்பையா, வனப் பணியாளா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.