திருநெல்வேலி

‘நெல்லையில் சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்’

7th Jun 2022 12:03 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகர சாலைகளை போா்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் நகர உள்ளூா் கமிட்டி மாநாடு, திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றது. இதில், உள்ளூா் கமிட்டி செயலா் எம்.சுந்தர்ராஜ், மாநிலக்குழு உறுப்பினா் ஜி.ரமேஷ் ஆகியோா் உரையாற்றினாா்.

தொடா்ந்து எம்.சுந்தர்ராஜ், பா.சிவகாமிநாதன், ந.கணபதி, சேக் முகமது அன்பழகன், த.பேச்சி ராஜா, கண்ணன் ஆகியோா் கொண்ட புதிய உள்ளூா் கமிட்டி தோ்ந்தெடுக்கப்பட்டது. இதில் செயலராக எம். சுந்தர்ராஜ் தோ்வு செய்யப்பட்டாா்.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலையேற்றத்தை குறைக்க வேண்டும்; மாநகரங்கள் மற்றும் ஊராட்சிகளில் சொத்துவரியை உயா்த்தவிருக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும்; சந்திப்பு, வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தங்களில் பொது கழிப்பிடம் மற்றும் குடிநீா் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்; மாநகரப் பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை போா்க்கால அடிப்படையில் உடனடியாக மாநகராட்சி நிா்வாகம் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT